ஜோதிட சாஸ்திரப்படி தசாபுக்தி என்பது மனித வாழ்நாளில் கிரகங்கள் ஆட்சிசெய்யும் கால அளவு எனலாம். தனிமனித தசா புக்திக் காலங்கள் அவர வர் பிறந்த நட்சத்திரத்தினை அடிப்படை யாக வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் கிருத்திகை நட்சத்திரநாளில் பிறந்தால் அவரது முதல் தசையானது சூரிய தசை என்றே அறியப்படும். (6 வருடம்), இந்த சூரிய தசைக் காலத்தில் ஒன்பது கிரகங்களும் வரும் காலகட்டங்கள் புக்திக்காலம் எனப்படுகிறது.

Advertisment

தசாபுக்திக் காலங்களில் மனிதனு டைய வாழ்வில் நன்மைகளோ, தீமைகளோ அதிக அளவில் வரக்கூடும். பொதுவாக குருதசை நடக்கும்போது மனதில் ஒருவித குதூகலமும் மகிழ்ச்சியும் அமைவது இயல்பு. அதேசமயம் சனி தசைக்காலம் என்றால் மனதில் ஒருவித கலக்கமும், பயமும் அமைவது இயற்கை.

Advertisment

vv

ஒருவருக்கு குரு தசை, சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசை, குரு புக்தி நடைபெறுகிறது என்று எடுத்துக்கொள்வோம். இரண்டு கிரகங்களுமே முதல்தர சுப கிரகங்கள் என்பதால், சுகம்தரும் மகிழ்ச்சியான வாழ்வே பெரும்பாலும் அமையும்.

எனினும் சோதனைகளை அதிகம் எதிர் கொள்ளும் காலமாக குரு தசை, சுக்கிர புக்திகளில் அமைவதைக் காணமுடிகிறது. காரணம் இரண்டு கிரகங்களுமே பகை கிரகங்கள். ராசி மண்டல வீடுகளில் குரு கிரகத்திற்கு தனுசு மற்றும் மீன வீடுகள் ஆட்சி வீடுகளாக அமைகின்றன. சுக்கிர கிரகத்திற்கு ரிஷபம் மற்றும் துலாம் வீடுகள் ஆட்சி வீடுகள். இந்த கிரக ஆட்சி வீடுகள் அசுப வீட்டு அமைப்புகளான 3, 6, 8 என்ற தொடர்பினைப் பெறுவதைக் காணமுடிகிறது.

இதைப்போலவே செவ்வாய் தசை மற்றும் புதன் புக்திகளில் சோதனைகளை எதிர்பார்க்கலாம். பகை கிரகங்களான இவற்றின் ஆட்சி வீடுகளும் அசுப தொடர்பான 3, 6, 8 என்று உள்ளது. மேலும் பகை கிரகங்களான சூரியன் மற்றும் சனி தசை, புக்தியிலும் கிரகங்கள் பகை கிரகங்களாக அமைந்து, அவற்றின் தசாபுக்திக் காலங்களில் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதே தியதி.

சாந்திப் பரிகார முறைகள்

சூரிய தசை, சனி புக்தி- ஈஸ்வர பூஜை

சனி தசை, சூரிய புக்தி- சூரிய நமஸ்காரம்

சுக்கிர தசை, குரு புக்தி- ஸ்ரீருத்ர ஜெபம்

குரு தசை, சுக்கிர புக்தி- ஸ்ரீ கிருஷ்ண மந்திர ஜெபம்

செவ்வாய் தசை, புதன் புக்தி- மிருத்யுஞ்ஜய ஜெபம்

புதன் தசை, செவ்வாய் புக்தி- ஸ்கந்த பூஜை

அந்தந்த கிரகங்களின் தலங்களுக்கு ஒருமுறையாவது சென்று வழிபாடு செய்தல் நல்லது. உள்ளூர் கோவில்களில் அர்ச்சனை, பூஜை செய்துவரலாம்.

செல்: 74485 89113